, ,

பேசவும் செய்திகள் வாசிக்கவும் துவங்கிவிட்ட ரோபோக்கள்!


வெளி 13:15 மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.

மிருகம்

மேற்கண்ட வசனத்தில் காணப்படும் ’அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும்’ என்ற வார்த்தைகளில், ‘மிருகம்’ என்ற வார்த்தை வரப்போகும் அந்திகிறிஸ்துவைக் குறிக்கிறது என்பது ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் அறிவுக்குட்பட்டதே. ஆனால், ’சொரூபம் பேசத்தக்கதாகவும்’ அதாவது ‘பேசும் சொருபம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என்ற கேள்வி நெடுங்காலமாய் நம்மவர்களிடத்தில் இருந்தே வருகிறது. அந்தக் கேள்விக்கு இந்தக் கடைசிகாலத்தில் அர்த்தம் தருபவையாக இருக்கின்றன.

சொரூபம்

சொரூபம் என்றாலே விக்கிரகங்கள் அல்லது சிலைகள் தான் நம் எல்லோருக்குமே நினைவுக்கு வரும். அந்த அடிப்படையில் ’மிருகத்தின் சொரூபம்’ என்பதை நாம், ’அந்திகிறிஸ்துவின் சொரூபம் (சிலை)’ என எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும் இருக்கும் என்றல்லவா வேதவசனம் தொடர்கிறது. அதன்படி பார்த்தால், உலகத்தின் எந்தச் சிலையும் எக்காலத்திலும் பேசியதே இல்லையே! பேசியதாக ஆதாரங்களும் இல்லையே! வேதமும் அதைக் குறித்து அழுத்தமாய் சாட்சி கொடுக்கிறதே!
சங்கீதம் 115:4-5 அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. 5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

உலகத்தின் எந்த மனிதனும் சொரூபங்கள் பேசி இதுவரை கேட்காமலிருக்க, வேதமும் அதைக்குறித்து அழுத்தமாய் சாட்சி கொடுத்திருக்க, வெளிப்படுத்தின விசேஷம் சொல்லும் ’மிருகத்தின் சொரூபம்’ மட்டும் எப்படிப் பேச முடியும்? ஒரு வசனம் சொரூபங்களாகிய உயிரற்ற உருவங்கள் ’பேசாது’ என சொல்ல, இன்னொரு வசனம் அதற்கெதிராக ’அவை பேசும்’ என சொல்லுமா? ஒருவேளை புதிய ஏற்பாட்டுக்காலத்தில் சொரூபங்கள் பேசத்தொடங்கி விடுமா? அல்லது உலகத்தின் கடைசிக்காலங்களில் மட்டும் அவற்றிற்கு பேசும் ஆற்றல் வந்துவிடுமா? இல்லை. எந்தக்காலத்திலுமே சொரூபங்களைப் பற்றிய பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகள் மாறாதவையே!

பேசா சொரூபங்களும் பேசும் சொருபங்களும்

ஆனால், வெளிப்படுத்தின விசேஷம் சொல்லும் மிருகத்தின் சொரூபம், விக்கிரகங்கள், சொரூபங்கள் பற்றிய திருவசனத்தின் வார்த்தைகளுக்குப் பொருந்தாது. ஆம். வேதம் சொல்லும் பேசமுடியாத சொருபங்களுக்கும் வெளிப்படுத்தின விசேஷம் சொல்லும் பேசத்தக்கதான சொரூபத்திற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பிரதான வேறுபாடு ’சத்துவம்’ எனப்படும் ஆற்றல்.

சொரூபங்கள் பொதுவாக மண், கல், மரம், இரும்பு, செம்பு, வெள்ளி, பொன் போன்றவற்றால் உருவாக்கப்படுகின்றன. முன்பு வேறே விதங்களில் இருந்த அவை, இப்போது ஓர் குறிப்பிட்ட வடிவமைப்புடன் கூடிய மண்ணாக, கல்லாக, மரமாக, உலோகங்களாகவே இப்போதும் தொடர்கின்றன. உருவம் மாறினாலும் வணங்கப்பட்டாலும் இப்போதும் அது மண்ணே. அது கல்லே. அது மரமே. அது உலோகமே. அவற்றிற்குள்ளாகவோ புறம்பாகவோ அவற்றில் இயக்கக்கூடிய எந்த ஆற்றலும் இருப்பதில்லை. பார்ப்பதில்லை. கேட்பதில்லை. பேசுவதில்லை.

இன்றைய நவீன உலகில் பல வருடங்களாகவே ரோபோக்கள் பயன்படுத்தப்பட்ட வருகின்றன. அவற்றின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக, மனித உருவத்திலான ஹ்யுமனாய்ட் ரோபோக்கள் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. பல்வகை உலோகங்களால் மனித எலும்புக்கூடுகள் போலவே உருவாக்கப்படும் இந்த ரோபோக்கள், பின் செயற்கைத் தோலினால் மூடப்பட்டு, மனித உருவில் நிற்கின்றன.

தேவன் மனிதனுக்குத் தந்த உருவத்தின் பெயர் ரூபம். மனிதன் தன் கைகளால் உருவாக்கிய ஒன்றிற்கு கொடுக்கும் வடிவத்திற்குப் பெயர் சொரூபம். ரூபம் உயிருள்ளது. சொரூபம் உயிரற்றது. அந்த வகையில்

இந்தக் கடைசிகால மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ரோபோக்களும் சொரூபங்களே. வெளிப்படுத்தின விசேஷம் குறிப்பிடும் மிருகத்தின் சொரூபம் என்ற வார்த்தை இந்த ரோபோக்களாகிய இன்றைய நவீன சொரூபங்களையே குறிக்கிறது.

பேசும் ரோபோ சொரூபங்கள்

பொதுவான மற்ற சொரூபங்களைப்போல அல்லாமல், இந்த ரோபோ சொரூபங்கள் மனிதனைப்போல பேசத்தக்கவையாக இன்று வளர்ந்து நிற்கின்றன. ஏனெனில், இவை AI எனப்படும் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) ஆற்றலில் செயல்படுகின்றன. மனிதர்களுக்கு ஆவியும் ஜீவனும் எப்படியோ, அப்படியே இந்த ஹ்யுமனாய்ட் ரோபோக்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. ஆம் இந்தத் தொழில்நுட்பமே இந்த வகை ரோபோக்களின் ஆவியாக இருக்கிறது.

மற்ற சொரூபங்களில் அவற்றைப் பேசவைக்கும் அல்லது அவற்றிலிருந்து பேசும் ஆற்றல் இல்லவே இல்லை. இந்த விக்கிரங்கள் மூலம் மனிதர்களை வஞ்சிக்கும் விக்கிரக ஆவிகளும் கூட இந்த சிலைகள் மூலம் பேச முடியவில்லை. ஆனால், இந்த கடைசிகால சொரூபங்களிலோ, ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனும் ஆற்றல் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் வேதம் சத்துவம் எனக் குறிப்பிடுகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம், இந்த ரோபோக்கள் பேசுகின்றன.

பறந்து பறந்து பேசிய சோபியா!

சமீபகாலங்களில் எடுத்துக்கொண்டோமானால், சோபியா என்ற ஹ்யுமனாய்ட் ரோபோ பேசியதை நாம் உதாரணமாகக் கூறலாம். சவூதி அரேபியாவின் குடிமகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தர் ரோபோ, தன் முதல் அறிமுகப்படலத்திலேயே தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியது. அதனை நோக்கி பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்தது. அதுமட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் பலவிதமான கேள்விகளோடு தன்னை பேட்டியெடுத்த தொலைக்காட்சி நிருபர்களுக்கும் விதவிதமான பதில்களைத் தந்தது.

மேலும், பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு, தொலைக்காட்சி நேர்காணல்களிலும், கருத்தரங்குகளிலும் பங்கேற்றது. உரையாற்றியது.
இந்த சோபியா மட்டுமல்ல. அதற்கும் முன்பும் பல ரோபோக்கள் பேசின. ஆனால், அவற்றிடம் பேசும்போது மனிதர்களிடத்தில் காணப்படும் முகபாவனைகள் காணப்படாது. சூழ்நிலைக்கு ஏற்றபடி பதில் சொல்லும் மற்றும் கேள்விகளை எதிர்கொள்ளும் தன்மைகளும் இல்லை எனலாம். அதனால்தான் சோபியா மற்ற எல்லா ரோபோக்களை விடவும் உலகப்புகழ் பெற்று விளங்கியது.

செய்தி வாசிக்கும் சீன ரோபோக்கள்!

ரோபோக்கள் பேசத்தொடங்கிவிட்ட பிறகு, அவை பேச்சு வெளிப்படும் இடங்களில் பணிகளில் அமர்த்தப்படாமல் இருக்குமா? சீனாவின் செய்தி நிறுவனமொன்றில் தற்போது மூன்று ரோபோக்கள் செய்தி வாசிக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. ஸின்ஹூவா எனும் சீன செய்தி நிறுவனம், சீனாவின் கூகுள் என அழைக்கப்படும் சோகோ எனும் தேடுபொறி எந்திரத்துடன் இணைந்து, 2017 இறுதியில், ஒரு ஆண் உருவ ஹ்யுமனாய்ட் ரோபோ செய்தியாளரை அறிமுகப்படுத்தியது.

உலகின் முதல் AI செய்தியாளர்கள் என்ற பெருமைமிகு அடையாளத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோ, ஒட்டுமொத்த உலகத்திற்கும் போய் சேரும் வண்ணம், ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு செய்திகளை தொகுத்து வழங்கியது.

அதனைத்தொடர்ந்து அதோடு இன்னொரு ஆண் ரோபோ செய்தித் தொகுப்பாளர் இணைந்தார். அந்த ரோபோவும் முந்தின ரோபோவைப்போல செய்திகளை தொகுத்து வழங்கத்தொடங்கியது.

செய்தி வாசிக்கும் பெண் ரோபோ!

இந்த வரிசையில், ஸின்ஹூவா மற்றும் சோகோ நிறுவனங்கள் இணைந்து, தற்போது பெண் உருவ ரோபோ ஒன்றை தங்கள் செய்தித்தொகுப்பாளர்கள் பட்டியலில் இணைத்துள்ளது. உலகின் முதல் AI பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இந்த ரோபோ, பிப்ரவரி 19-ஆம் தேதி உலகுக்கு ட்விட்டர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் ஆண் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்ட அன்றே இந்த பெண் ரோபோ குறித்த செய்தியும் ஸின்ஹூவா நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த ரோபோ சீனாவில் வருடாந்திர தேசிய சபை மற்றும் அரசியல் ஆலோசனைக் குழு கூட்டங்களின் போது தன்னுடைய தொகுப்பாளர் பணியைத் தொடங்கவிருக்கிறது என்று அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்த மூன்று ரோபோக்களுக்குமான உருவாக்கம் ஒன்றேதான் என்றாலும், அதனைப் பெண் வடிவத்தில் உருவாக்குவதில் தான் இந்தக்கால இடைவெளி என்றும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

மனிதர்களை உள்வாங்கி…

இந்த மூன்று ரோபோக்களுமே, அந்த செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று செய்தித் தொகுப்பாளர்களின் தோற்றம், முகபாவனைகள், குரல்கள் ஆகியவற்றை உள்வாங்கியே அவர்களைப்போலவே உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக செய்தி நிறுவனங்களில், செய்தித்தொகுப்பாளர்களுக்கு சூழ்நிலையைப் பொருத்துப் பலமணி நேரங்கள் செய்தி வாசிக்கும் பணிகள் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் செய்தியாளர்கள் பலவிதமான சங்கடங்களைச் சந்திக்க நேரும்.

ஆனாலும், அவற்றை எல்லாம் அவர்கள் தங்கள் முகத்தில் வெளிப்படுத்தாமல், உற்சாகமாய் செய்திகளை உள்வாங்கிப் பேசிக்கொண்டிருக்க வேண்டி வரும். இயற்கை உபாதைகள், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பரபரப்பான புதிய செய்திகள் உண்டாக்கும் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிதமான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் செய்தி நிறுவனங்களுக்கோ தங்கள் சேனலில் தொடர்ச்சியாக செய்திகள் ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்க வேண்டும். இதற்காக அவர்கள் பல வாசிப்பாளர்களை பணியில் வைத்திருப்பர்.

ஆனால், இந்த ரோபோக்களோ எத்தனை மணி நேரங்களானாலும் சரி. தொடர்ந்து செய்திகளை வாசித்துக்கொண்டே இருக்கும். இந்த ரோபோக்களின் உண்மை உருவத்தைக்கொண்ட இயற்கை நுண்ணறிவு செய்தியாளர்களால் முடியாத ஒன்றை இந்த ரோபோக்கள் நிகழ்த்திக்கொண்டே இருக்கும். இது இந்த ரோபோக்களுக்கானது மட்டுமில்லை. பொதுவாகவே ரோபோக்கள் மனிதர்களை விட இந்தத் தன்மையில் முற்றிலும் சிறப்புவாய்ந்தவையாக இருக்கின்றன. அதனால்தான் பெருநிறுவனங்களில் மனிதர்களின் இடங்களில் இன்று இப்படிப்பட்ட ரோபோக்கள் இடம்பிடிக்கத் தொடங்கி இருக்கின்றன.

அந்திகிறிஸ்துவை உள்வாங்கி…

மூன்று செய்தியாளர்களையும் உள்வாங்கி, அப்படியே அவர்களைப்போலவே மூன்று ஏஐ ரோபோக்கள் உருவாக்கப்பட்டது போலவே, வரப்போகும் அந்திகிறிஸ்துவை அவனுடைய தோற்றம், நடை, உடை, முகபாவனைகள், குரல் என அனைத்தையும் உள்வாங்கி, செயற்கை நுண்ணறிவு ஆற்றலில் புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்படும். அந்த ரோபோ அந்திகிறிஸ்துவைப் போலவே பேசும். நடக்கும். செயல்படும். தனக்கிருக்கும் சுயமாய் சிந்திக்கும் ஆற்றலைக்கொண்டு அது அவனைப்போலவே செயல்படும். தன்னை வணங்காதவர்களைக் கொலையும் செய்யும்.
ஆக, பரிசுத்த வேதாகமம் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும் என்று சொன்ன வார்த்தைகள், இந்த பேசும் ஏஐ ரோபோக்கள் மூலமே நிறைவேறப்போகின்றன. இப்பொழுது பேசும் சொரூபங்களாகிய ரோபோக்கள் வந்துவிட்டன. பலதுறைகளிலும் பணிபுரியத் தொடங்கிவிட்டன.

இனி அந்திகிறிஸ்து மட்டும்தான் வரவேண்டும். அவனுக்கு முன்னால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் சபையாகிய நம்மை எடுத்துக்கொள்ள வர வேண்டும்.

பேசும் சொரூபங்களே வந்துவிட்டன என்றால், நம் ஆண்டவரின் வருகை எவ்வளவு சமீபமாய் என்பதை உணர்ந்து எச்சரிக்கையடைவோம்.

மாரநாதா!

Etiam id ex at erat fermentum luctus maximus et justo. Aenean ultricies faucibus sagittis. Etiam ultrices mollis faucibus. Sed finibus neque nec eros posuere varius a a ante. Nulla euismod eget eros non posuere.

Nunc laoreet dolor purus, sed feugiat lacus cursus quis. Aenean ante dolor, imperdiet sed dignissim eu, accumsan eget est. Nam imperdiet dapibus est a varius.
– Sam Jones

Vivamus quis placerat ligula, sed eleifend orci. Vestibulum ante ipsum primis in faucibus orci luctus et ultrices posuere cubilia Curae; Sed ornare nibh quis arcu pretium, eget ultrices enim euismod. Nullam sed rutrum odio. Nullam urna turpis, facilisis ut nunc vel, molestie ornare turpis. Integer ultrices magna sed justo mollis tempor. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Maecenas vehicula auctor velit, sed accumsan turpis lacinia sed. Cras semper justo at sapien iaculis auctor. Nulla ac orci in orci mattis feugiat id id nunc. Phasellus sem ipsum, pulvinar non ultricies eget, iaculis et orci. Pellentesque a nibh sit amet est congue eleifend at nec augue. Cras tempus congue magna nec consequat.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *