பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசனத்தில் பிரிட்டன் பேரரசு

  • பரிசுத்த வேதாகமத்தில் பிரிட்டன்

தானியேல் 7:4 முந்தினது சிங்கத்தைப் போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப் போல இரண்டு காலின் மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.

  1. முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது;

பரப்பளவிலும் பராக்கிரமத்திலும் சிறந்து, இவ்வுலகில் பரந்து விரிந்து கோலோச்சிய பெர்ஷிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம் மற்றும் ரோமானிய சாம்ராஜ்யங்களின் வரிசையில் ’சூரியன் மறையாத சாம்ராஜ்யம்’ எனப் போற்றப்பட்ட ’பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு.

நவீன உலக வரலாற்றில் நூறாண்டுகள் தாண்டியும் கோலோச்சிய பெருமை கிரேட் பிரிட்டனுக்கு உண்டு. உலகின் மொத்த மக்கள் தொகையில், 5-இல் ஒரு பகுதி மக்கள், ஒருகாலத்தில் கிரேட் பிரிட்டனின் ஆளுகையில் இருந்தனர். தன் வலிமை வாய்ந்த கடற்படையைக் கொண்டு, பிரிட்டன் உலகின் பல பகுதிகளையும் தன் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இந்தியா, பர்மா, ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்ததுபோலவே, இன்றைய வல்லரசான அமெரிக்காவும் ஓர் காலத்தில் பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது. 

20-ஆம் நூற்றாண்டு கண்ட இணையற்ற சாம்ராஜ்யமான ’யுனைடட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன்’ தான் தானியேல் தீர்க்கதரிசி கண்ட ’சிங்கத்தைப்போல இருந்த முதலாம் மிருகம்’ ஆகும்.

குல மரபு வழி சின்னங்களின் (HERALDIC) வட்டங்களில் சிங்கங்கள் முக்கியமான அடையாளங்கள். அவற்றில் பல பதிப்புகள் உள்ளன. அவை உலகின் பல்வேறு நாடுகளையும் அரச குடும்பங்களையும் குறிக்கின்றன. உலக வரலாற்றில் சிங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகவும் பிரபலமான ராஜ்யங்களில் ஒன்று இங்கிலாந்து. ஏனெனில், ஏறக்குறைய ஒன்பது நூற்றாண்டுகளாக, இங்கிலாந்து சிங்கத்தையே தன் அடையாளமாகப் பயன்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் மன்னர்கள், தங்கள் ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மட்டுமல்லாமல், தங்களையும் தங்கள் அரச வாழ்வின் அங்கமான முக்கிய நிகழ்வுகளையும் அடையாளப்படுத்த பல்வேறு விதமானசிங்கபதிப்புகளையே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் சிங்கங்கள்

முன்னங்கால்களை உயர்த்தியவையாக முன்னோக்கிப் பாயும் ’மூன்று சிங்க’ங்கள் தான் ஆரம்ப காலம் முதல் இங்கிலாந்தின் அடையாளம்.

12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தை ஆட்சி செய்த ’முதலாம் ரிச்சர்ட்’ என்ற மன்னனே, தன் ’அங்கேவின் பேரரசை’ பிரதிநிதித்துவப்படுத்த முதன்முறையாக சிங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். அவரது ராஜ்ஜியத்தில், இன்றைய இங்கிலாந்துடன் இன்றைய பிரான்சின் நார்மண்டி மற்றும் அக்விடைன் பகுதிகளும் இணைந்திருந்தன. இம்மூன்று பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ’மூன்று சிங்கங்களின்’ கேடயம் உருவாக்கப்பட்டது.

இந்த மூன்று சிங்கங்கள் மட்டுமல்லாமல், அவை இடம்பெற்றிருக்கும் கேடயத்தைத் தாங்கிப் பிடிப்பவையாக இரண்டு சிங்கங்கள் கேடயத்தின் இரு பக்கத்திலும் நின்றன. அவை மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்பவையாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஸ்காட்லாந்தின் சிவப்புச்சிங்கம்

’யுனைடட் கிங்டம்’ எனப்படும் ’ஐக்கிய ராஜ்ஜியம்’ கூட்டரசில் இங்கிலாந்திற்கு அடுத்து மிக முக்கியமான நாடு ஸ்காட்லாந்து. இங்கிலாந்தை போலவே இந்நாட்டிற்கும் அதன் துவக்கக்காலம் முதல் சிங்கம் தான் அடையாளம். 

இங்கிலாந்திற்கு ’மூன்று சிங்கங்கள்’ என்றால், ஸ்காட்லாந்திற்கோ ’ஒற்றைச் சிங்கமே’ அடையாளம். மூன்று சிங்கங்கள், சிவப்பு நிறப் பின்னணியில் தங்க நிறத்தில் உருவாக்கப்பட, ஒற்றைச்சிங்கம் ‘மஞ்சள் நிறப் பின்னணியில் சிவப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் அதன் பெயர் ’சிவப்புச்சிங்கம்’. இங்கிலாந்தின் சிங்கங்கள், முன்னங்கால்களை மட்டும் சற்று உயர்த்தி நடப்பவையாய் உருவாக்கப்பட்டன. மாறாக, ’ஸ்காட்டிஷ் சிங்க’மோ கொதித்தெழும் கோபத்துடன் முழு உடலையுமே நிமிர்த்தி நடப்பதாக வடிவமைக்கப்பட்டது.

இதற்கு மாறாக, ஸ்காட்லாந்தின் ‘சிவப்புச்சிங்க’க் கேடயத்தைத் தாங்கிப்பிடிப்பவையாக இரண்டு வெள்ளைக்குதிரைகள் கேடயத்தின் இரண்டு பக்கங்களிலும் நின்றன. இவையும் தங்கள் முன்னங்கால்களை உயர்த்தினவையாய் நின்றன.

லயனும் லயன்ஹார்ட்டும்

ஸ்காட்லாந்தின் சிங்கத்தை உருவாக்கிப் பயன்படுத்தத் தொடங்கியவர் என முதலாம் வில்லியம் சுட்டிக்காட்டப்படுகிறார். ரிச்சர்டைப் போலவே வில்லியமும் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரே.

இருவருமே தங்கள் தேசத்தை மட்டுமல்ல. தங்களையும் வீரத்தின் அடையாளமான சிங்கமாக முன்னிறுத்த விரும்பியிருப்பது, ’ரிச்சர்ட் தி லயன்ஹார்ட்’ மற்றும் ’வில்லியம் தி லயன்’ என்ற அவர்களது மாற்றுப் பெயர்களிலேயே தெரிகிறது. இவ்விருவருக்குப் பிறகு இவ்விரு தேசங்களையும் ஆட்சி செய்தவர்களும் இவர்கள் வடிவமைத்த அடையாளங்களையே பின்பற்றத் தொடங்கி இருக்கின்றனர். 

ராயல் ஆர்ம்ஸ்

கால மாற்றத்தில், இங்கிலாந்தின் கேடயம் நான்கு காற்பகுதிகள் கொண்டதாக மேம்படுத்தப்பட்டது. அவற்றில் இங்கிலாந்தின் சிங்கங்களுக்கே அதிக காற்பங்குகள் ஒதுக்கப்படும். எனினும், போர்கள் மூலம் புதிதாக இணைக்கப்படும் அல்லது புரிதல் மூலம் தாமாக இணையும் ராஜ்யங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது அவசியம் ஆனது. அதனால், நாற்பங்கு கேடயத்தில் இங்கிலாந்திற்கான காற்பங்கு ஒன்றுடன் நிறுத்தப்பட்டு, மற்ற ராஜ்ஜியங்களுக்கும் இடம் அளிக்கப்பட்டது.    

தங்கச் சிங்கங்களுடன் இணைந்த சிவப்புச்சிங்கம்!

கி.பி. 1603. ஸ்காட்லாந்தின் மன்னரான ஆறாம் ஜேம்ஸ், ’முதலாம் ஜேம்ஸ்’ என்ற பெயரில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திற்கும் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இவருக்கு முன் இங்கிலாந்தை ஆண்ட முதலாம் எலிசபத்திற்கு பிள்ளைகள் இல்லாததால், வரலாற்றில் முதன்முறையாக ஆங்கிலேயர்கள், ஒரு ஸ்காட்லாந்து மன்னனை தங்களுக்கும் மன்னனாக ஏற்றுக்கொண்டனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய மூன்று ராஜ்யங்களும் இவரது ஆட்சிக்காலத்தில் ஒரே தலைமையின் கீழ் வந்ததால் ’கிரீடங்களின் ஒன்றியம்’ (UNION OF CROWNS) என்ற கூட்டு ராஜ்யம் உருவானது. கி.பி. 1649 வரையில் இந்த ஒன்றியம் நீடித்தது.

இங்கிலாந்துடன் இணைந்த ஸ்காட்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ’சிவப்புச்சிங்கம்’ முதன்முதலாக இங்கிலாந்தின் ’ராயல் ஆர்ம்ஸ்’ நாற்பங்குக் கேடயத்தின் காற்பங்கிற்குள் கடந்து வந்தது.

  • அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது;

’சிங்கத்தைப் போல இருந்த மிருகத்திற்கு உண்டாயிருந்த ‘கழுகின் செட்டைகள்’ என்ற வார்த்தைகள் இன்றைய உலக வல்லரசான அமெரிக்காவைக் குறிக்கிறது. எம்பளத்தின் அடிப்படையில் பார்த்தால், ’இரண்டு செட்டைகள்’ அல்லது ’இரண்டு சிறகுகள்’ விரித்திருக்கும் கழுகே, அமெரிக்காவின் அடையாளம். வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், அமெரிக்கா அதன் துவக்கக்காலத்தில் பிரிட்டனின் குடியேற்றப் பகுதிகளுள் ஒன்றாக, அதன் முழு கட்டுப்பாட்டின் கீழாகவே இயங்கி வந்தது. தானியேல் தீர்க்கதரிசியின் ‘அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது’ என்ற வார்த்தைகள், ’பிரிட்டிஷ் அமெரிக்கா’ என அழைக்கப்பட்ட அன்றைய காலனி அமெரிக்காவையே குறிக்கிறது. 

பிரிட்டனின் காலனி பிரதேசமாக மாறிய அமெரிக்கா!

ஐரோப்பிய மாலுமிகள் கொலம்பஸ் மற்றும் அமெரிக்கோ வெஸ்புகி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கண்டமான அமெரிக்காவில், கி.பி.1606-லிருந்து 1670 வரையிலான காலக்கட்டத்தில், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்து தனி மனிதர்களும், வணிக நிறுவனங்கள் சார்ந்தவர்களும் தங்கள் குடியேற்றங்களை அமைக்கத் தொடங்கினர்.

அன்றைய காலக்கட்டத்தில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகள் ஒன்றிணைந்த ’கிரேட் பிரிட்டன்’ எனும் கூட்டரசு உருவாகி இருக்கவில்லை. அதனால் அன்றைய அமெரிக்கக் குடியேற்றங்கள், ’இங்கிலாந்தின் குடியேற்றங்கள்’ (COLONIES OF ENGLAND) என்றே அழைக்கப்பட்டு வந்தன. ஆனால், 1707-ல் இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இணைந்து ’கிரேட் பிரிட்டன்’ எனும் ராஜ்ஜியம் உருவானதில் இருந்து, ’கிரேட் பிரிட்டனின் குடியேற்றங்கள்’ (COLONIES OF GREAT BRITAIN) என அழைக்கப்படத் தொடங்கின. பொதுவாக, ‘பிரிட்டிஷ் அமெரிக்கா’ என்றும் ‘பிரிட்டிஷ் வெஸ்ட் இண்டிஸ்’ என்றும் அழைக்கப்பட்டன. அமெரிக்காவை முதலாவதாகக் கண்டுபிடித்த கொலம்பஸ் அதற்கு ‘வெஸ்ட் இண்டிஸ்’ என பெயரிட்டதால் ‘பிரிட்டிஷ் வெஸ்ட் இண்டிஸ்’ என்ற பெயரிலும் அன்றைய அமெரிக்கா அழைக்கப்பட்டது. இந்தக் குடியேற்றங்கள் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருந்தே ஆட்சி செய்யப்பட்டன.

’175 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை ஆளுகை செய்த கிரேட் பிரிட்டன்!

அமெரிக்காவில், பிரிட்டிஷ் குடியேற்றங்கள் நிகழ்ந்த சம காலத்தில், ஃப்ரென்ச் மற்றும் ஸ்பானிஷ் குடியேற்றங்களும் நிகழ்ந்தன. இந்திய பகுதிகளைக் கைப்பற்றுவதில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்குள் எப்படி போட்டியும் போர்களும் நிகழ்ந்தனவோ, அமெரிக்க பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் அவற்றிற்குள் அப்படிப்பட்ட போர்கள் நிகழ்ந்தன. ஆனாலும், போட்டி நாடுகளை வென்று, பெரும்பான்மை இந்தியாவை பிரிட்டன் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது போலவே, பெரும்பான்மை அமெரிக்காவையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சேர்த்தது.   

  • நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது;

விடுதலைக்கு வித்திட்ட அமெரிக்க புரட்சிப்போர்!

இந்நிலையில், இன்றைய அமெரிக்காவின் அன்றைய 13 குடியேற்ற மக்களும், பிரிட்டிஷ், ஸ்பானிஷ் என்ற இன, மொழி வேறுபாடுகளை எல்லாம் புறந்தள்ளி, தங்களை அமெரிக்கர்களாக மட்டுமே உணர்ந்து, தாங்கள் குடியேறிய அமெரிக்க மண்ணிற்காக ஒன்றுபட்டனர். ஜென்ரல் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமை தாங்கினார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து, கி.பி.1775-இல் துவங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சிகர யுத்தத்திற்கு ‘அமெரிக்கப் புரட்சிப்போர்’ (AMERICAN REVOLUTIONARY WAR) என்று பெயர். போரின் முடிவில், அமெரிக்கப் புரட்சிப் படை, பிரிட்டிஷ் ஆதிக்கப் படையை வீழ்த்தியது. 1776-ஆம் ஆண்டு ஜூலை 4-இல் சுதந்திர அமெரிக்கா பிரகடனம் செய்யப்பட்டது.

ஆனாலும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற புதிய நாடு முழுமையாக உருவாவதற்கு 1789 வரையிலான காலக்கட்டம் தேவைப்பட்டது. அந்த ஆண்டில் தான் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.   

மீண்டும் அமெரிக்காவிடம் தோல்வி கண்ட பிரிட்டன்!

’வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை’யாக, அமெரிக்கா தன்னை எதிர்த்துக் கொண்டு விலகிப்போனது பிரிட்டனை உறுத்திக்கொண்டே இருந்திருக்கும் போல! அமெரிக்க வர்த்தகத்திற்கு தடைகளை ஏற்படுத்தத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, 1812-இல் இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் போர் மூண்டது. வரலாற்றாசிரியர்கள் இதனை, 1812 யுத்தம்’ (WAR OF 1812) என்று குறிப்பிடுகின்றனர். மேற்கு ஐரோப்பாவில் ’நெப்போலியனிக் வார்ஸ்’ எனப்படும் ’நெப்போலியனின் யுத்தங்கள்’ மிக தீவிரமாக நிகழ்ந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த இந்த யுத்தம், 1815 வரைக்கும் நீடித்தது.

ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் போரிலும் அமெரிக்கக் கழுகே வெற்றிபெற்றது. இந்தப் போருடன், அமெரிக்காவில் பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு ஏறக்குறைய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது எனலாம். அமெரிக்கா தவிர்த்து, வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்த இன்னொரு பெரிய நாடான கனடாவை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்து, ஆறுதல்பட்டுக் கொண்டது பிரிட்டன்.

இப்படியாக, ’கிரேட் பிரிட்டன்’ எனும் ’சிங்கத்தைப் போன்ற மிருக’த்திடமிருந்து அமெரிக்கா எனும் ’கழுகின் செட்டைகள்’ பிடுங்கப்பட்டன. அதற்குப் பிறகான வரலாற்றில் இவ்விரு நாடுகளுமே அடுத்தடுத்து வல்லரசுகளாக உயர்ந்தது தனிக்கதை.   

’ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர்’ – தடைகளை உடைத்து தீர்க்கதரிசன நிறைவேறுதல்களுக்கு வித்திட்ட ட்ரம்பின் முதல் கையெழுத்து!

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். டிசம்பர் 6 2017,  புதன்கிழமையன்று வெள்ளை…

Read More

பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசனத்தில் பிரிட்டன் பேரரசு

பரிசுத்த வேதாகமத்தில் பிரிட்டன் தானியேல் 7:4 முந்தினது சிங்கத்தைப் போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில்,…

Read More

சிலரது இடங்களை எவராலும் நிரப்ப முடியாது – ஆப்ரஹாமை இழந்ததால் அனைத்தையும் இழந்த லோத்து

ஆப்ரஹாம் எனும் அடையாளம்! லோத்து என்கிற மனிதனின் அடையாளமே ஆப்ரஹாம் தான். இல்லையென்றால் அவன் இந்த அளவுக்கு வேதப்புருஷர்களில் ஒருவனாக…

Read More

வெளிப்படுத்தின விசேஷ தீர்க்கதரிசிகளும் பறக்கும் ட்ரோன் தொழில்நுட்பமும்!

2 தீர்க்கதரிசிகளின் மரணக்கொண்டாட்டத்திற்கு வெகுமதிகள் எடுத்துச்செல்லப்போகும் ’ட்ரோன்’ தொழில்நுட்பம்! சத்தமில்லாமல் நாம் வாழும் இந்த உலகமானது ட்ரோன் (DRONE) எனும்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *